உள்ளூர் செய்திகள்

வட்ட பஸ்கள் இயக்க கிராமமக்கள் கோரிக்கை

Published On 2022-07-01 06:52 GMT   |   Update On 2022-07-01 06:52 GMT
  • 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
  • நன்னிலம் பேரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பஸ் பாதைகளை அமைத்து வட்ட பஸ்–களை இயக்க வேண்டும்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவின் தலைநகரம், நன்னிலம் ஆகும், நன்னிலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 12-க்கும் மேற்பட்ட வங்கிகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், சுமார் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

நன்னிலத்தில் சுற்றி 40-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு, போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் வட்ட பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வர்த்தக நிறுவனத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள், அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். எனவே நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், கீழ் அகரம், சலி பேரி, திருவாஞ்சியம், அச்சுதமங்கலம், வடகுடி, சிகார் பாளையம் வழியாக வந்தடைய வட்டப்பாதை பேருந்தும், நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன் பேட்டை, ஆலங்குடி, முடிகொண்டான், சன்னா–நல்லூர், கீழ பனங்குடி, ஆண்டிபந்தல், பனங்குடி, மூல மங்கலம், மாப்பிள்ளை குப்பம் வழியாக ஒரு வட்ட பேருந்தும், நன்னிலம், செங்கமேடு, ஆனை குப்பம், த ட்டாத்தி மூலை, வீதிவிடங்கன், திருவாஞ்சியம், அச்சுத–மங்கலம், கீழ்குடி, கீழ் அகரம், சலிப்பே ரி, மாப்பிள்ளை குப்பம் வழியாக, ஒரு வட்ட பேருந்தும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போதுமான போக்கு–வரத்து வசதி இல்லாத காரணத்தினால், நன்னிலம் வர்த்தகமும், மந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நன்னிலம் பேருரை கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பேருந்து பாதைகளை அமைத்து, வட்ட பேருந்து–களை இயக்க வேண்டும். என கோரிக்கை மக்களிடம் வலுவாக இருந்து வருகிறது.

மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், கிராம மக்கள் நன்னிலம் பகுதிக்கு வந்து செல்லும் வகையில், வட்ட பேருந்து பாதை அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News