உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் கடையில் மின்சாரம் தாக்கி பலியானவருக்கு நஷ்டஈடு கேட்டு குவிந்த கிராம மக்கள்: புவனகிரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
- ராஜாராமன் ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
- ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
கடலூர்:
புவனகிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ராஜாராமன் (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்க சென்றார். அப்பொழுது திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது அதனால் அவர் அந்த கடையின் ஓரம் ஒதுங்கி அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டியும், அந்த மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டியும், ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் சுமார் 500-க்கும் மேற்ப்பட்டோர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் குவிந்து வலியுறுத்தி வருகின்றனர்.