உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே கிராம மக்கள் திடீர் மறியல்

Published On 2023-04-12 10:12 GMT   |   Update On 2023-04-12 10:12 GMT
  • தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக அந்த தெருவில் இருந்த குடிநீர் குழாயும் அகற்றப்பட்டது.

ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்தூர்-ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ஆத்தூர் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றதை அடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News