உள்ளூர் செய்திகள்

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஜெயசீலன் உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்-கலெக்டர் பேச்சு

Published On 2023-02-09 08:36 GMT   |   Update On 2023-02-09 08:36 GMT
  • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
  • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News