காலி குடங்களுடன் பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை
- காலி குடங்களுடன் பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் ஆலாத்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தாமரைக் குளம் கிராமத்தில் இருந்து பைப்லைன் மூலமாக ஆலாத்தூர் கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கல்வி மடை முதல் ஆலாத்தூர் வரையிலான சாலை விரி வாக்க பணியின் காரணமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பைப்லைன் முழுவ தும் சேதமடைந்தது. இத னால் ஆலாத்தூர் கிரா மத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த ஒன்றரை வருடமாக குடிநீர் பிரச்சி னையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் ஆலாத்தூர் பொதுமக்கள் தனியார் வாகனங்களில் குடம் ஒன்றிற்கு ரூ.15 செலவழித்து நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 குடங்கள் வரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டது. 1½ வருடங்கள் கடந்தபின்பும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நட வடிக்கை எடுக்ககப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட ஆலாத்தூர் பொதுமக்கள் திடீரென காலி குடத்துடன் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த அதிகாரிகளி டம் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.