உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2023-01-05 08:09 GMT   |   Update On 2023-01-05 08:09 GMT
  • ராஜபாளையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
  • “வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

ராஜபாளையம்

ராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் "வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் விசுவநாதன், ஊர் நாட்டாமை மற்றும் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர் இளையபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கிராமத்தில் சாலை யோரம் முட்புதர்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தூய்மை, கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தொடர்பு அலுவலர் செய்யது முகம்மது ஆரீப் தலைமையில், இயற்கைப் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் சத்ய சாயி அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.

அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் நிறுவனம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில், மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்டமும் என்னும் தலைப்பில் தலைமையாசிரியர், அன்பின் வலிமை என்னும் தலைப்பில் சிவக்குமார், எழுமின் விழிமின் என்னும் தலைப்பில் கருத்தாளர்.பழனியப்பன், ''நிழல்களும் நிஜங்களும்'' என்ற தலைப்பில் மாரியப்பன், யோகக்கலை என்னும் தலைப்பில் உடற்கல்வி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

ஆசிரியர் விஜயானந்தி கிராம பெண்களுக்குக் கலைப்பயிற்சி வழங்கினார். நிறைவு நாளன்று சங்கமம் பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ், பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News