உள்ளூர் செய்திகள்

வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான கல்வி பயிற்சியாளர் சுதா பேசினார்.

காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்

Published On 2022-12-22 08:11 GMT   |   Update On 2022-12-22 09:43 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
  • இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உள் புகார்கள் குழு மாணவர்கள் ஆலோசனை குழு மற்றும் வேலைவாய்ப்பு குழு ஆகிய குழுக்கள் இணைந்து ''கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பிலான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக ரெக்சோனா நம்பிக்கை கல்வி பயிற்சியாளர் சுதா, கலந்து கொண்டார்.

மாணவர் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் உள் புகார்கள் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில், மாணவிகள் எவ்வாறு தங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை தொழிற்துறையில் நுழை வதற்கு திறன்களை மேற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது இருதரப்பட்ட வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதற்கான யுக்திகளையும், நேர்த்திகளையும் பயிற்று வித்தார்.

வேலைவாய்ப்பு குழு பொறுப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News