காளீஸ்வரி கல்லூரி: மருத்துவ பரிசோதனை முகாம்
- காளீஸ்வரி கல்லூரி சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
- முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சமூக விரிவாக்கப்பணி சார்பில் சிவகாசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் எக்ஸ்ரே மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் எக்ஸ்ரே மற்றும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகளின் மூலம் காசநோய், நாள்பட்ட சளி, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் கண்டறிப்படும். இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ராஜன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் டேனியல்ராஜன், காசநோய் பார்வையாளர் பாலமுருகன், காசநோய் ஆய்வக உதவியாளர் முத்துவேல், ஐ.சி.டி.சி. துறையினர் மற்றும் தமிழியல் துறைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சு.முத்துசிதம்பரபாரதி செய்திருந்தார். முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.காளீஸ்வரி கல்லூரி, Kalishwari College , மருத்துவ பரிசோதனை, Camp,