உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி லட்சுமி பேசினார்.

தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு

Published On 2022-08-06 08:54 GMT   |   Update On 2022-08-06 08:54 GMT
  • தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
  • மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு ''தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பேசினர்.

மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டிவனம் பொறியியல் உறுப்புக்கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெ.லட்சுமி கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் பணி நிறுவனங்களின் நேர்காணலின் போது சுயவிவரத்தை எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார். சுயவிவரம்-பயோடேட்டா இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கினார்.

நேர்காணலின்போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள், விண்ணப்பித்த பதவிக்கான தேவைகள், தகுதி ஆகியவற்றை நன்றாக வளர்த்து கொண்டு அதன் பிறகு நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துைற பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், தனம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News