முளைப்பாரி ஊர்வலம் செல்வதில் பிரச்சினை; போலீசார் குவிப்பு-பதட்டம்
- அருப்புக்கோட்டை அருகே கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
- இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள பெரிய கண்மாயில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு முளைப்பாரி ஊர்வலம் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்ததால் வேறு பாதையில் செல்ல அந்த சமூகத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேறொரு பகுதி வழியாக முளைப்பாரி சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பாதிக்கப்படும். எனவே குறிப்பிட்ட பகுதியில் முளைப்பாரி ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினர். இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் அந்த சமுதாயத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 40 பேர் மட்டும் அந்தப்பகுதியில் முளைப் பாரி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் விருது நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சமுதா யத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த காலங்களில் முளைப்பாரி ஊர்வலம் நடந்த பகுதியி லேயே தற்போது ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும். வேறொரு பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்தனர்.
கோவில் முளைப்பாரி ஊர்வலம் செல்வது தொடர்பாக இரு சமுகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.