சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினரான பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் பேசுகையில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மருந்து தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் உயிர் செயல் முறைகளில் திரவ இயக்கவியலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். உருவகப் படுத்துதல், தொழிற்முறை பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார்.
திரவ இயக்கவியலில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். இதனால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இந்த துறை சம்பந்தமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட திரவ இயக்கவியல் ஆய்வகம் துணைபுரியும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சுேரஷ்குமார் மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.