மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு மருத்துவ முகாம்கள்
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு மருத்துவ முகாம்கள் 26-ந்தேதி வரை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தை களுக்கு மருத்துவச் சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ள உள்ளது. எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் அல்லது 04562-252068 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:-
22-ந்ேததி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யிலும், 29-ந்தேதி கல்குறிச்சி காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 3-ந்தேதி எம். ரெட்டியபட்டி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியி லும், 5-ந்தேதி அருப்புக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 10-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13-ந்தேதி சாத்தூர் எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும், 17-ந்ேததி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந்தேதி மகாராஜபுரம் வத்ராப் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியி லும், 26-ந்தேதி சிவகாசி நகராட்சி எ.வ.டி.உயர்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.