ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம்
- ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
- மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையினர், ''பதின்ம வயதினருக்கான இடர்பாடுகளும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தினர். கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் நிகழ்வின் புரவலர்களாக வழி நடத்தினர். முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி வரவேற்றார்.
தமிழ்த்துறைப்பேராசிரியர் கவிதா, முதல் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் முனியம்மாளை அறிமுகப்படுத்தினார். அவர் ''மகளிருக்கான சட்டங்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.
தமிழ்த்துறைப்பே ராசிரியர் பத்மபிரியா, 2-ம் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரக வணிக மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அவர் ''உள்ளங்கையில் வாழ்க்கை'' என்ற தலைப்பில் பேசினார். 3-ம் அமர்வில் சிவகாசி, ஹனுமந்தா அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவர் பைரவனை தமிழ்த்துறைப்பேராசிரியர் தனலட்சுமி அறிமுகப்ப டுத்தினார்.
அவர் "உடல்நலமும் மனநலமும்'' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி நன்றி கூறினார். இதில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த 17 பேராசிரியர்கள், அனைத்துத்துறையைச் சேர்ந்த மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.