உள்ளூர் செய்திகள் (District)

 100 வயதை கடந்தும் வாக்களித்து வரும் தருமபுரியை சேர்ந்த மூதாட்டி முனியம்மாளுக்கு கலெக்டர் சாந்தி நேரில் சென்று தலைமை தேர்தல் ஆணையரின் வாழ்த்து கடிதத்தை வழங்கிய காட்சி.

100 வயதை கடந்தும் வாக்களிப்பு: தேர்தல் ஆணையரின் வாழ்த்து கடிதம் பெற்ற தருமபுரி மூதாட்டி -கலெக்டர் நேரில் சென்று வழங்கினார்

Published On 2022-10-02 09:35 GMT   |   Update On 2022-10-02 09:35 GMT
  • நேரடியாக வாழ்த்து கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • கலெக்டர் சாந்தி நேரில் சென்று முனியம்மாளிடம் வழங்கினார்.

தருமபுரி,

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 100 வயதை கடந்த வாக்காளர்களுக்கு அவர்களது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை பாராட்டி வாழ்த்துக்கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக வாக்காளர் பட்டியலின்படி 100 வயதை எட்டியவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் மூலம் நேரடியாக வாழ்த்து கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 80 வயதை தாண்டிய 25-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இவ்வாறு கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்படி தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட ஆத்து மேடு பகுதியில் வசித்து வரும் முனியம்மாள் என்ற மூதாட்டி 100 வயதை எட்டி வாக்களித்து வருகிறார் என்ற தகவலின்படி அவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்திக் கொண்டி ருக்கும் அம்மூதாட்டியை கவுரவித்து பாராட்டி இந்திய தேர்தல் ஆணைய தலைவர் அனுப்பிய கடிதத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று முனியம்மாளிடம் வழங்கினார். அப்போது வட்டாட்சியர் ராஜராஜன், தேர்தல் தனி வட்டாட்சியர் சவுகத் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News