செங்கோட்டை ஜெயேந்திரா பள்ளியில் வனஉயிரின பாதுகாப்பு வார விழா
- வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார்.
- மாறுவேடப் போட்டியில் யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார்.
செங்கோட்டை:
செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியா் கார்த்திக் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வன விலங்குகள் பாது காப்பு, உயிரியல் பன்மயம் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் மாறு வேடப்போட்டி, ஓவிய ப்போட்டி, பாட்டுப்போட்டி, போட்டோஷாப், பேஷியல் பெயின்டிங் போன்ற போட்டிகளும், ஆசிரியா்கள், பெற்றோர்களுக்கு தனிநடிப்பு, ஞாபகத்திறன் போட்டிகளும் நடத்தப்ப ட்டது.
போட்டியில் சிறப்பாக வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார். வனவிலங்கு களையும் காடுகளையும் அழித்தால் உண்டாகும் விளைவுகளை சிறப்பாக பேஷியல் பெயிண்டிங் மூலம் உணா்த்திய 12-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம்ஆகாஷ் குழுவினர் முதல் பரிசு பெற்றனா். மாறுவேடப் போட்டியில் முயல் வேடமணிந்த யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார். ஞபாகத்திறன் போட்டியில் பெற்றோர் தேவி முதல் பரிசு பெற்றார். தனி நடிப்பு போட்டியில் ஆசிரியைகள் சம்ஷியாபேகம், அன்பரசி குழு முதல் பரிசு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்கள், பெற்றோர், ஆசிரியா்களுக்கு தாளாளா் ராம்மோகன் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். ஆசிரியை அன்பரசி நன்றி கூறினார்.