உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படுமா?

Published On 2023-01-20 10:26 GMT   |   Update On 2023-01-20 10:26 GMT
  • 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்னமும் இடம் ஒதுக்கப்படவில்லை.
  • ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டி :

திருப்பூரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் வாகன பதிவுகள் நடைபெறுகின்றன. திருப்பூர் மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்னமும் இடம் ஒதுக்கப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் இடம் தேடப்பட்டு வந்தது. இன்னமும் இடம் தேர்வு செய்யாமல் கிடப்பில் உள்ளன.

தற்போது அலுவலகம் உள்ள இடத்தில் போதிய இட வசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் ஏ.பி.நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாகன ஆய்வு பணிகள் தற்காலிகமாக நடந்து வருகின்றன. இங்கு அதிகப்படியான வாகனங்கள் புதுப்பித்தல் மற்றும் ஆய்வு பணிக்கு வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு ஆய்வுக்கு வரும் வாகனங்கள் நொச்சிபாளையம் சாலைக்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் நொச்சிப்பாளையம் பிரிவு சாலை வரை அணிவகுத்து நிற்கின்றன. ஆய்வு நடக்கும் தனியார் இடத்திலும் இடமின்றி ஆய்வுக்கு வந்த வாகனங்கள் நொச்சிப்பாளையம் சாலை வரை வரிசையில் நிற்கின்றன.

நொச்சிப்பாளையம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு ஆய்வுக்கு வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் நொச்சிப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு விரைவாக இடம் தேர்வு செய்து அரசு இடத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News