உள்ளூர் செய்திகள்
தாது உப்பு பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம்
- கால்நடை வளர்ப்பில் தாது உப்பு பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரனஅள்ளி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் அட்மா திட்டத்தின் சார்பில் கால்நடை வளர்ப்பில் தாது உப்பு பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து பயிற்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய கால்நடை உதவி பேராசிரியர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பில் தாது உப்புகளின் பயன்பாடு முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.
முன்னோடி விவசாயி சங்கர் உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ரவி, பெரியசாமி, ரேணுகா மற்றும் பலர் செய்திருந்தனர்.