உள்ளூர் செய்திகள்

பேரணியை சங்ககிரி பேரூராட்சி மன்றத்தலைவர் மணிமொழி தொடங்கி வைத்த காட்சி.

சங்ககிரி அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-12-31 10:01 GMT   |   Update On 2022-12-31 10:01 GMT
  • சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
  • இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இப்பேரணியை சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் திருமா வளவன் முன்னிலையில் சமப்படுத்துதல் என்ற

உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய ஸ்டால் நிறுவப்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண்பிரபு, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், சங்ககிரி அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கோபால், ஆய்வுகள் நுட்பனர் சீனிவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பேரூர் துணை செயலாளர் ரமேஷ், கல்லூரி மாணவிகள், சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுது அறக்கட்டளை திட்ட மேலாளர் மரியாள், களப்பணியாளர்கள் சசிரேகா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News