உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை குளத்தில் வேளாண்மை துறை பகுதி பணிகள் குறித்து உலக வங்கி குழு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்




செங்கோட்டை பகுதியில் வேளாண்மை பணிகள் குறித்து உலக வங்கி குழு ஆய்வு

Published On 2022-09-22 08:12 GMT   |   Update On 2022-09-22 08:12 GMT
  • உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வளம் நில வளம் என்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • உலக வங்கி நிதி உதவியால் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்தது.

செங்கோட்டை:

உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வளம் நில வளம் என்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக வங்கி நிதி உதவியால் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்தது.

வேளாண்மை துறையின் சார்பாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திருந்திய நெல் சாகுபடி, மண்ணை வளப்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி உள்ளிட்ட சில திட்டங்களை சிற்றாறு வடிநில பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.

அதன் பின் விளைவுகளை ஆய்வு செய்யும் பொருட்டு உலகவங்கியின் நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ்டோட் ஜீஸ்டிக்மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனுஆய்வு செய்தனர்.

முதலாவதாக செங்கோட்டை வட்டாரம் இலத்தூர் கிராமத்தில் பெரியகுளத்தில் ஒட்டுமொத்த பின்விளைவுசாகுபடி திடலான தக்கைபூண்டு திடல்களை பார்வையிட்டனர். முக்கிய முன்னோடி விவசாயிகளிடம் கலந்து ஆலோசனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செங்கோட்டை கீழூர் கலங்காத கண்டி கால்வாய் பாசன பகுதியில் ஒட்டுமொத்த திருந்திய நெல் சாகுபடி திடல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது உலக வங்கி குழுவினர் முன்னோடி விவசாயி யான சங்கர சுப்பிரமணியன், முத்து சிவ கிருஷ்ணன், அக்பர் அலி, புளியரை விவசாய சங்க தலைவர் செல்லத்துரை உள்ளிட்ட விவசாயிகளிடம் திட்ட செயலாக்கத்தின் விளைவு களை கருத்துப்பரிமாற்றம் செய்தனர்.

ஆய்வின்போது சென்னையில் இருந்து வருகை தந்த பயிர் நிபுணர் சிவக்குமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகரன், விஜய் சாகர், விஜயராம், ஜூடித் டி சில்வா வருகை தந்தனர். தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர்மற்றும் துணை இயக்குனர் நல்ல முத்துராஜா உலகவங்கி நிபுணர் குழுவிற்கு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பற்றி விளக்கிக் கூறினார்கள்.

வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் செங்கோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிக்கை சமர்ப்பித்தனர். முன்னோடி விவசாயிகள்இலத்தூர் ரமேஷ், பெரிய இசக்கி, அண்ணசாமி ,கருப்பசாமி, புளியரை செல்லத்துரை, செங்கோட்டை சங்கர சுப்பிரமணியன், முத்து சிவ கிருஷ்ணன், அக்பர் அலி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இலத்தூரில் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். செங்கோட்டை பகுதியில் உதவி வேளாண்மை அலுவலர் குமார் மற்றும் ஆத்மா திட்ட உதவி மேலாளர் மாரிராஜ் செய்திருந்தனர்.


Tags:    

Similar News