உள்ளூர் செய்திகள்

கோவையில் 4 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு

Published On 2022-06-24 10:11 GMT   |   Update On 2022-06-24 10:11 GMT
  • 2022-ம் ஆண்டுக்கான சார்பு சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை) எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.
  • 4 மையங்களிலுமே காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆங்கில எழுத்து தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடக்கிறது. 4 மையங்களிலுமே காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆங்கில எழுத்து தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடக்கிறது.

கோவை:

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022-ம் ஆண்டுக்கான சார்பு சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை) எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

நாளை முதன்மை எழுத்து தேர்வு கோவையில் சூலூர் ஆர்.வி.எஸ். கல்லூரி, கோவில்பாளையம் எஸ்.என்.எஸ் கல்லூரி, மலுமிச்ச ம்பட்டி இந்துஸ்தான் கல்லூரி, கவுண்டம்பாளையம் கொங்கு நாடு கல்லூரி என 4 மையங்களில் நடக்கிறது.

4 மையங்களிலுமே காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆங்கில எழுத்து தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடக்கிறது.

இதேபோல் நீலகிரியில் ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வுக்கு அைழப்பு கடிதத்துடன் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்ப டுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை, பரீட்சை அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் மேற்கூறிய பொருட்கள் தவிர வேறு எதுவும் எடுத்து வர அனுமதியில்லை.

செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து வர அனுமதியில்லை. தேர்வு மைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.மேலும் அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்ப ற்றுமாறு தேர்வாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News