திண்டுக்கல்லில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குள்ளனம்பட்டி:
கோவை மாவட்டம் பொ ள்ளாச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 35).கூலி த்தொழிலாளி. இவர் கடந்த 8ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லை அடுத்த கூவன த்துவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போ லீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் மே ற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மருதுபாண்டியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபரின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் அவர் பொன்மாந்துறை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அரவிந்த் குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திண்டுக்கல், வடமதுரை பகுதிகளில் திருடிய 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.