காரைக்கால் கோட்டுச்சேரியில் 40 பவுன் நகை திருட்டில் வாலிபர் கைது 200 கிராம் தங்கம் மீட்பு
- சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி எம்.எஸ்.பி லட்சுமி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். ,இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி மாலை ரேவதி, தனது 2 குழந்தைகளுடன் கடைவீதிக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு ரேவதி அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, கோட்டுச்சேரி ேபாலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், திருட்டு நடந்த வீட்டின் அருகே, கோட்டுச்சேரி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர், அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது, திருப்பூர் மாவட்டம் எடுவபாலயம் பகுதியைச்சேர்ந்த ஜீவானந்தம்(வயது34) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுரேஷ் வீட்டு கதவை உடைத்து, 40 பவுன் தங்க நகைகளை, கேரளா, சந்திரப்புரத்தைச்சேர்ந்த நண்பர் சம்சுதின் பாபு(32) என்பவரோடு சேர்ந்து கொள்ளையடித்ததையும்,