உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான தடகள போட்டி-நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 'சாம்பியன்'

Published On 2023-11-04 08:56 GMT   |   Update On 2023-11-04 08:56 GMT
  • மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.
  • தாயம்மாள் மினி மாரத்தானில் வெள்ளி வென்றார்.

நெல்லை:

அண்ணா பல்கலைக் கழகம் மண்டலம் நெல்லை சார்பில் சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் மகளிருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர் மற்றும் 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.

மாணவி ஜெயா மிஸ்பா 400 மீட்டர் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர், 40x400 ரிலேவில் தங்கமும் வென்றார். மாணவி ஜென்னி மார்க்ஸ் 100 மீட்டரில் தங்கம் ,100 மீட்டர் தடை தாண்டுதல், 4x100 ரிலே ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

தாயம்மாள் 5 ஆயிரம் மீட்டர், 4x400 மீட்டர் ஆகியவற்றில் தங்கம், மினி மாரத்தானில் வெள்ளி வென்றார். மாணவி போஜாக்ஸியோ 4x400 ரிலேவில் தங்கமும், மான்யா நீளம் தாண்டுதலில் வெள்ளியும், 4x100 ரிலேவில் தங்கமும் வென்றனர்.

மாணவி காரிய லட்சுமி தேவி 100 மீட்டரில் வெண்கலமும், 100 மீட்டரில் வெள்ளியும், 4x100 ரிலே தங்கமும் வென்றார். இன்பான்ட் நிவானா 400மீட்டர், 800 மீட்டர், 4x400 ரிலேவில் தங்கமும் வென்றர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்த எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா கேப்ரியல், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவிகளை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் ப்ரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News