செய்திகள் (Tamil News)

அதிமுகவை உடைக்கவும், கவிழ்க்கவும் சூழ்ச்சி- முதல்வர் பழனிசாமி பேச்சு

Published On 2019-03-27 07:45 GMT   |   Update On 2019-03-27 07:45 GMT
அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று சதிக்காரர்கள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #LokSabhaElections2019 #Edappadipalaniswami
திருப்போரூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்போரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக தேர்தலை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் இது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று சதிக்காரர்கள், பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவருகின்றனர்.


உடல்நலம் சரியில்லாத போதும் அம்மா அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடையாளம் காட்டி, விலாசம் காட்டி வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் இன்று அவர்கள் மாபெரும் துரோகம் செய்துவிட்டனர். ஆசை வார்த்தைகளில் மயங்கி இன்று அவர்களால் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். துரோகிகளுக்கு இந்த தேர்தலில் தக்கபாடம் புகட்ட வேண்டும்.

நாடு நலம்பெற உறுதியான, ஆற்றல்மிக்க பிரதமர் வேண்டும் அதற்கு மோடி தான் தகுதியானவர். சதிக்காரர்கள் இந்தியநாட்டை அழிக்க நினைத்தபோது சதியை முறியடித்த திறமையான பிரதமர் மோடி.

எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும் என்று நினைத்த அம்மா அவர்களின் கனவு நிறைவேற வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல பல நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.

ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்த ஒரே அரசு இது. ஏழை, எளியோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க- வினர் நீதிமன்றம் சென்றனர். தடையாணை கொடுக்கவில்லை அதற்குள் தேர்தல் வந்துவிட்டது.

தேர்தல் முடிந்தவுடன் இந்த பணம் வழங்கப்படும். அதேபோல் தேசியஊரக வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கு பதில் 200 நாட்கள் வேலை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Edappadipalaniswami
Tags:    

Similar News