செய்திகள்

கேரளாவில் ஆதார் மூலம் குடும்பத்துடன் இணைந்த முதியவர்

Published On 2018-05-29 11:44 GMT   |   Update On 2018-05-29 11:44 GMT
கேரளாவில் வீட்டு முகவரியை மறந்த 80 வயது முதியவர் ஆதார் மூலம் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #aadhaar #kerala
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூன்கன்பாரா பகுதியைச் சேர்ந்த பாஷி என்ற 80 வயது முதியவர் சில நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் அரசு பேருந்தில் ஏறி அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் டிக்கெட் எடுத்துள்ளார்.

ஆனால் அப்பகுதியில் இறங்காமல் இருந்த அவரை விசாரித்த போது அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவரிடம் பஸ் கண்டக்டர் கேட்ட போது, அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற பதிலை மட்டும் மீண்டும், மீண்டும் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரிடம் விசாரித்தனர். அவர் சரிவர பதில் அளிக்காததால், அவரை அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்டிப்பாக இவர் ஆதார் அட்டை வாங்கியிருப்பார் என்ற நம்பிக்கையில் அவர் கைரேகையை சோதனை செய்தனர். இதன் மூலம் முதியவரின் வீட்டு முகவரி மற்றும் போன் நம்பர் கிடைத்தது.

இதையடுத்து, பாஷியின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர் தனது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். ஆதார் மூலம் முதியவர் தனது குடும்பத்துடன் இணைக்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #aadhaar #kerala
Tags:    

Similar News