செய்திகள்
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது
நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. #NEET #SC #Plea
புதுடெல்லி:
நீட் தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம் செய்யப்படும் போது ஏராளமான பிழைகள் ஏற்படுகின்றன. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகேஷ்வர் மற்றும் நீதிபதி ஷந்தானுகவ்டார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள். இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பாக மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளோம் என்றார். #NEET #SC #Plea