செய்திகள்

பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவர் கைது

Published On 2018-06-06 07:07 GMT   |   Update On 2018-06-06 07:07 GMT
பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்த கட்டிட கலை வடிவமைப்பாளரான 26 வயது பெண் கடந்த 1-ந் தேதி மும்பை புறப்பட்டார்.

அதிகாலை 2 மணி அளவில் அவர் வாடகை காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென கார் டிரைவர் மாற்றுப் பாதையில் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் இது குறித்து கேட்ட போது மிரட்டினார். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றார். பின்னர் தனது காரில் வைத்து மானபங்கப்படுத்தினார்.

அதோடு அந்த பெண்ணின் ஆடையை கட்டாயமாக அவிழ்த்ததும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். மேலும் படம் எடுக்க போஸ் கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தினார்.

இதுகுறித்து புகார் கொடுத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுவோம் என்றும் மிரட்டினார்.

அந்த பெண் மும்பை சென்றடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் போலீஸ் கமி‌ஷனருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினார். இந்த புகார் மனு ஜே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை மானபங்கப்படுத்திய வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

செல்போனில் படம் எடுப்பதற்காக குற்றவாளி அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்தார். மிரட்டி படம் எடுத்து உள்ளார்.

இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News