செய்திகள்

ஜி.எஸ்.டி. பாதிப்பையும் மீறி பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 20.4 சதவீதம் உயர்வு

Published On 2018-06-19 18:40 GMT   |   Update On 2018-06-19 18:40 GMT
ஜி.எஸ்.டி. பாதிப்பையும் மீறி இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. #GST #DollarMillionaries
மும்பை:

இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘கேப்கெமினி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சொத்து மதிப்பும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 லட்சம் கோடியாகும். இதே காலகட்டத்தில் உலக அளவில் உயர்ந்த கோடீசுவரர்கள் எண்ணிக்கையின் சராசரி 11.2 சதவீதம் மட்டுமே.



ஜி.எஸ்.டி. தாக்கத்தை மீறி, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஜி.எஸ்.டி. தாக்கம் தற்காலிகமானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘இந்தியா, உலகஅளவில் வேகமாக வளரும் சந்தை’ என்றும் அது கூறுகிறது. கடந்த ஆண்டு சந்தை மூலதனத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்வு ஏற்பட்டதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நிலங்களின் மதிப்பு உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை இதர காரணங்கள் ஆகும். 
Tags:    

Similar News