செய்திகள்

9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு

Published On 2018-06-22 13:35 GMT   |   Update On 2018-06-22 13:43 GMT
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #CauveryOrganizingCommittee

புதுடெல்லி:

காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த ஆணையத்தில் தமிழகம் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இதில் கர்நாடக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #CauveryOrganizingCommittee
Tags:    

Similar News