செய்திகள்

கர்நாடக முன்னாள் மந்திரி விமலாபாய் தேஷ்முக் காலமானார்

Published On 2018-07-22 10:00 GMT   |   Update On 2018-07-22 10:00 GMT
கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னாள் மந்திரி விமலாபாய் தேஷ்முக்(70) இன்று காலமானார். #VimalabhaiDeshmukhdead
பெங்களூரு:

கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வாக மூன்றுமுறை பதவி வகித்தவர் ஜே.எஸ். தேஷ்முக். இவரது மனைவி விமலாபாய் தேஷ்முக் 1994-ம் ஆண்டு கர்நாடக அந்நாள் முதல் மந்திரி நாடகவுடாவை எதிர்த்து ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், ஜே.ஹெச். பட்டேல் தலைமையிலான மாநில மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக விமலாபாய் நியமிக்கப்பட்டார்.

பா.ஜ.க.வில் இருந்து தனியாக பிரிந்த கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சி வேட்பாளராக கடந்த 2012- சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த விமலாபாய் தேஷ்முக்(70) விஜயபுரா (பிஜப்பூர்) மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #VimalabhaiDeshmukhdead
Tags:    

Similar News