செய்திகள் (Tamil News)

மும்பை - ஓடும் புறநகர் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2018-08-03 01:07 GMT   |   Update On 2018-08-03 01:07 GMT
மும்பையில் இயங்கிவரும் புறநகர் ரெயிலில் திடீரென பாம்பு புகுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மும்பை :

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் புறநகர் ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் உள்ள கைப்பிடியில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த ரெயில் நிலையமான தானேயில் ரெயில் நின்றதும் பயணிகள்  அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து பாம்பு இருந்த ரயில் பெட்டிக்கு விரைந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ரெயிலில் இருந்து பாம்பை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய ரெயில்வே செய்திதொடர்பாளர் சுனில் உதாசி, ’வழக்கமான இரண்டு பயணங்களை முடித்த பிறகு ரெயிலின் மூன்றாவது பயணத்தில் பாம்பு புகுந்துள்ளது. பொதுமக்கள் கூட்டமாக இருந்தும் கைப்பிடி அமைந்துள்ள உயரமான இடத்தில் திடீர் என பாம்பு இருந்துள்ளது.

இது சாதாரண நிகழ்வாக தெரியவில்லை, யாரோ பாம்பை வேண்டும் என்றே ரெயிலில் விட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News