செய்திகள்

வாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார் அமித் ஷா

Published On 2018-08-16 04:15 GMT   |   Update On 2018-08-16 04:15 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று காலை மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். #VajpayeeHealth #AmitShah
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டி பிரார்த்தனையும் செய்துள்ளனர்.



இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். #VajpayeeHealth #AmitShah

Tags:    

Similar News