செய்திகள்

ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணமில்லை - பியுஷ் கோயல்

Published On 2018-08-18 12:28 GMT   |   Update On 2018-08-18 12:28 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods
புதுடெல்லி:

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தை சூனியம் சூழ்ந்ததுபோல, மழை வெள்ளத்தால் தற்போது அந்த மாநிலமே சேதமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பல லட்சம் மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கும், கேரளாவுக்கும் உதவ பல்வேறு மாநிலங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. சமீபத்தில் கோவை மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.



இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுவுடைமை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ரெயில்கள் வழியாக கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
Tags:    

Similar News