செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்துள்ள சசி தரூர் ஜெனீவா செல்ல டெல்லி கோர்ட் அனுமதி

Published On 2018-08-21 04:06 GMT   |   Update On 2018-08-21 04:21 GMT
ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சசி தரூருக்கு டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #Delhicourt
புதுடெல்லி:

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு மனு தாக்க்ல செய்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது.



தற்போது ஜெர்மனியில் உள்ள அவர், ஜெனீவா செல்வதற்கு அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஜெனீவா பயணம் மேற்கொள்ள உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சசி தரூரின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கோபி அன்னான் கடந்த சனிக்கிழமை மறைந்ததாக தெரிவித்து, சசி தரூர் பயணம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ஜெனீவா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார்.  #ShashiTharoor #Delhicourt
Tags:    

Similar News