செய்திகள்

எச்டிஎப்சி வங்கி துணைத்தலைவர் கொலை - விசாரணை வளையத்தில் சக ஊழியர்கள்

Published On 2018-09-10 10:13 GMT   |   Update On 2018-09-10 10:13 GMT
கடந்த 5-ம் தேதி காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வியின் உடல் மும்பை கல்யான் ஹாஜி மலாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #HDFC
மும்பை:

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவராக உள்ளவர் சித்தார்த் சங்கி. கடந்த 5-ம் தேதி மாயமான இவரை குடும்பத்தினரும், போலீசாரும் தேடி வந்த நிலையில், சிங்வியின் சடலம் மும்பை கல்யான் ஹாஜி மலாங் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்திய போலீசார் சர்பராஸ் ஷேக் என்ற டாக்ஸி டிரைவரை கைது செய்தனர். சங்வியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உத்தரவின் பெயரிலேயே சர்பராஸ், கொலையை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில், சங்கி உடன் பணியாற்றும் சிலரையும் போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டில் வங்கியில் இணைந்த சங்வி, 10 ஆண்டுகளில் மூன்று புரமோஷன்களை பெற்று தற்போது துணை தலைவராக உள்ளார். இந்த வளர்ச்சி பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News