செய்திகள்

மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2018-11-28 12:36 GMT   |   Update On 2018-11-28 14:11 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #MadhyaPradeshAssemblyElections
போபால்:

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக ஓட்டு போட்டனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளோம். இதற்கென லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றினர் என தெரிவித்தார்.



இந்நிலையில், மாலை 6 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshAssemblyElections
Tags:    

Similar News