இந்தியா (National)
ராஜ் தாக்கரே

ஒலிபெருக்கி சர்ச்சை விவகாரம் - ராஜ் தாக்கரே மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2022-05-03 15:27 GMT   |   Update On 2022-05-03 15:27 GMT
நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே வீடு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.
மும்பை:

அவுரங்காபாத்தில் கடந்த 2-ம் தேதி நவநிர்மாண் சேனாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேச்சுகையில் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்வார்கள். மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்கவில்லை எனில் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவுரங்காபாத் போலீசார்  நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுவது உள்பட 4 பிரிவுகளின் கீழ் (116, 117, 153 (ஏ), எம்.பி.ஒ. 135) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராஜ் தாக்கரே தவிர அவுரங்காபாத் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News