இந்தியா

ஜம்மு காஷ்மீரில் துணிகரம்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2024-10-20 19:29 GMT   |   Update On 2024-10-20 19:29 GMT
  • ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News