இந்தியா
7 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை: இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் ஆபரேஷன் செய்த டாக்டர்
- சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வடிந்து கொண்டே இருந்தது.
- கடந்த 11-ந் தேதி ஆபரேஷன் நடந்தது.
புதுடெல்லி:
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் காமா 1-வது செக்டரில் தனியார் கண் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த நிதின்பாடி என்பவர் தன் 7 வயது மகன் யுதிஷ்டிரனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.
சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வடிந்து கொண்டே இருந்தது. இதை அங்கு பரிசோதித்தபோது கண்ணில் பிளாஸ்டிக் போல ஏதோ பொருள் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். அதனை ஆபரேஷன் மூலம் அகற்றிவிடலாம் என்றார்.
அதன்படி கடந்த 11-ந் தேதி ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் டாக்டர் ஆபரேஷன் செய்து விட்டார்.
இதை அறிந்து சிறுவனின் பெற்றோர் கொந்தளித்தனர். ஆபரேஷனுக்கு ரூ.45 ஆயிரம் செலவிட்டதாக கூறிய அவர்கள், தவறாக ஆபரேஷன் செய்த டாக்டரின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.