இந்தியா

பெங்களூரு விமான நிலையத்தை பார்த்து வியப்படைந்த ஜப்பானிய பெண்- வீடியோ

Published On 2024-11-15 03:42 GMT   |   Update On 2024-11-15 03:42 GMT
  • மூங்கில் கட்டைகளால் கட்டப்பட்டுள்ளதை கண்டு வியந்தார்.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜப்பானை சேர்ந்த இளம்பெண் கீகி சென். சமூக வலைத்தள பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கீசி சென் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் பெங்களூரு விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார். விமான நிலையத்தின் ஓய்வறை, காத்திருப்புப் பகுதிகள் மற்றும் உணவு அங்காடிகள் உள்ளிட்டவை முழுவதும் மூங்கில் கட்டைகளால் கட்டப்பட்டுள்ளதை கண்டு வியந்தார்.

மேலும் அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 'இந்தியா விமானநிலையத்தை கண்டு வியப்பு' என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு பார்வைகளை குவித்து வைரலாகி வருகிறது.




Tags:    

Similar News