சூப்பர் சிக்ஸ் திட்டம் என்ன ஆச்சு- விமர்சனம் செய்தால் கைது செய்வதா? ரோஜா ஆவேசம்
- பெண்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
- விவசாயிகள், வேலையில்லா இளைஞர், முதியோர் உதவி தொகைக்கான நிதி ஒடுக்கப்படவில்லை.
திருப்பதி:
ஆந்திரா சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த திட்டங்களை நிறைவேற்றாததால் பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மாநிலத்தில் உள்ள 1 கோடியே 54 லட்சத்து 47 ஆயிரத்து 61 இணைப்புகளுக்கு ரூ.4115 கோடி ஒதுக்க வேண்டும்.
விவசாயிகள், வேலையில்லா இளைஞர், முதியோர் உதவி தொகைக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
சூப்பர் 6 திட்டத்தில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி கொடுத்து இருக்கிறீர்கள் இதுபற்றி விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை எடுப்பீர்களா?.
அதனைக் கண்டு நாங்கள் பயப்படமாட்டோம். நான் உட்பட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் உங்களுக்கு எதிராக கண்டிப்பாக பதிவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.