இந்தியா
பவுர்ணமி பூஜை - அணிவகுத்த வாகனங்கள் - பாட்னா சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
- இந்த பவுர்ணமி நாளில் அன்னதானம் செய்வது பல வகையில் சிறப்பானது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பவுர்ணமி தினம் என்றால் வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பவுர்ணமி நாளுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விசேஷம் ஆகும்.
இந்த ஐப்பசி மாத பவுர்ணமி வெள்ளி அன்று வந்துள்ளதால் அம்பாள் வழிபாடு செய்ய உகந்தது. அன்னாபிஷேகம் நடைபெறுவதால் ஈசனை அன்னாபிஷேகக் கோலத்தில் காண்பது அன்னதோஷம் போக்கும். இந்த பவுர்ணமி நாளில் அன்னதானம் செய்வது பல வகையில் சிறப்பானது.
இந்த நிலையில், பவுர்ணமி பூஜைக்காக கங்கை நதியில் நீராட ஒரே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வாகனங்களில் கிளம்பியதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பிரதான சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.