இந்தியா

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்துக்கு 7 ஆயிரம் கிலோ எடையில் பிரமாண்டமான 'ராமர் அல்வா'

Published On 2024-01-11 10:56 GMT   |   Update On 2024-01-11 10:56 GMT
  • 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
  • அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுள்ள ரவையில் அல்வா தயாரிக்க உள்ளார்.

இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.

ராம் அல்வா கிண்டுவதற்காக 12000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.

இது எக்கு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.

7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில விஷ்ணு மனோகர் பல முறை இடம் பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறைாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News