இந்தியா

இந்தியாவில் 10 ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 748 பேர் பலி.. ரெயில்வே வெளியிட்ட புள்ளிவிவரம்

Published On 2024-09-16 06:27 GMT   |   Update On 2024-09-16 06:27 GMT
  • 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன
  • தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.

இந்தியாவில் ரெயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் மக்களின் உயிரிழப்புகளும் தொடர்கதையாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் சுமார் 748 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவலை இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் சமூக செயல்பாட்டாளர் ராஜு வலக்கலா என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.

அதாவது, 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மொத்தமாக 10 ஆண்டுகளில் மொத்தமாக 748 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரெயில்வேயின் பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதிகரிக்கும் விபத்துகளுக்கு ரெயில்வே பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதே காரணம் என்று ராஜு தெரிவிக்கிறார். இதற்கிடையே வந்தே பாரத் சொகுசு ரெயில்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வெகு மக்கள் பயன்படுத்தும் ரெயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தையும் சமூக செயல்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

Tags:    

Similar News