ஆன்லைனில் துபாய் லாட்டரி டிக்கெட் வாங்கிய பஞ்சாப் பெண்ணுக்கு ரூ.8.3 கோடி பரிசு
- கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார்.
- ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார்.
மே 3 அன்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாயல் (42) என்ற பெண் ஆன்லைனில் துபாய் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட்டிற்கு மே 16 அன்று இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20 அன்று தனது 16 ஆவது திருமண நாளை கொண்டாடிய பாயல் அதனை ஓட்டி கணவனிடம் இருந்து பரிசாக வாங்கிய பணத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இதன் மூலம் 1 மில்லியன் டாலர் பணத்தை லாட்டரி டிக்கெட்டில் வென்ற 229 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த 12 வருடங்களாக இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டுக்களை பாயல் வாங்கி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் துபாய் விமான நிலையத்தில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்களை அவர் வாங்கியுள்ளார். ஆனால் இந்த முறை அவர் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனலைனில் லாட்டரி டிக்கெட் வாங்கிய சமயத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
"இந்த பரிசு பணத்தை எனது குழந்தைகளின் எதிர் காலத்திற்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பிக்கு உதவுவதற்கும், பஞ்சாபி மக்களுக்கு தொண்டு செய்வதற்கும் பயன்படுத்த போகிறேன்" என்று பாயல் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு 14 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
1999 ஆம் ஆண்டு இந்த துபாய் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 5000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். அதில் ஒரு டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த துபாய் லாட்டரி டிக்கெட்டை இந்தியர்கள் தான் அதிக அளவில் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.