இந்தியா

வழி தவறி சென்ற 90 வயது மூதாட்டி: உறவினரிடம் ஒப்படைத்த தொழிலதிபர்

Published On 2024-07-24 06:40 GMT   |   Update On 2024-07-24 06:40 GMT
  • மூதாட்டி வழி தவறி டெல்லிக்கு சென்று விட்டார்.
  • மூதாட்டியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தொழிலதிபர்.

ஜான்சி:

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் ரதிசாஹூ (வயது95). வீட்டில் இருந்து வெளியே சென்ற மூதாட்டி வழி தவறி எப்படியோ டெல்லிக்கு சென்று விட்டார். அங்கு திக்கு தெரியாமல் திகைத்து நின்றார்.

அப்போது நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் அனுஜ்குப்தா புனித யாத்திரை பயணத்தில் இருந்து திரும்பி வந்தார். அவர் புதுடெல்லி வந்த போது மூதாட்டி ரதிசாஹூ திக்கு தெரியாமல் நிற்பதை கண்டறிந்தார். மூதாட்டியிடம் சென்று பேச்சு கொடுத்தார்.

அப்போது அவரால் ஜான்சியை சேர்ந்தவர் என்பது மட்டும் சொல்ல முடிந்தது. உடனே அனுஜ் குப்தா மூதாட்டிக்கு ரெயிலில் ஏ.சி. பெட்டியில் டிக்கெட் வாங்கினார். மூதாட்டியை ரெயிலில் இருக்ைகயில் அமர வைத்து அழைத்து வந்தார்.

அப்போது அவர் செல்போனில் ரீல்ஸ் செய்து மூதாட்டியை உறவினர்கள் கண்டறிய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

அவரது ரீல்சை அதிர்ஷ்ட வசமாக ரதிசாஹூயின் கொள்ளு பேத்தி நவ்யா சாஹூ சிறிது நேரம் கழித்து பார்த்தார். உடனே அவர் அனுஜ்குப்தாவை தொடர்பு கொண்டார்.

மூதாட்டி கடந்த 18-ந்தேதி வீட்டை விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்பி வராததால் அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மூதாட்டியை தொழிலதிபர் அனுஜ்குப்தா மீட்டு வருவது தெரியவந்ததும் மூதாட்டி யின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜான்சி ரெயில் நிலையத்துக்கு சென்று மூதாட்டி மற்றும் தொழிலதிபரை வரவேற்றனர். மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் தொழிலதிபர் ஒப்படைத்தார்.

அப்போது அவர்கள் தொழிலதிபர் எங்களுக்கு கடவுள் போன்றவர் என்றனர். 

Tags:    

Similar News