இந்தியா

கருப்பாக இருப்பவர் மோகினியாட்டம் ஆட தகுதியற்றவர் எனக்கூறிய பரதநாட்டிய கலைஞர் மீது வழக்கு பதிவு

Published On 2024-03-31 09:43 GMT   |   Update On 2024-03-31 09:43 GMT
  • ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து
  • ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர்.

பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞர் கலமண்டலம் சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.

அதில், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர். அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார்" என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்தனர்.

இவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு கேரள அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News