இந்தியா
கொச்சி விமான நிலையத்தில் 'புளுடூத் ஸ்பீக்கரில்' மறைத்து வைத்து ரூ.99 லட்சம் தங்கம் கடத்திய பயணி
- அரபு நாடான ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது.
- நவுசாத் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரபு நாடான ரியாத்தில் இருந்து பக்ரைன் வழியாக கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது நவுசாத் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடமைகளை பரிசோதித்து பார்த்த போது, 'புளுடூத் ஸ்பீக்கரில்' மறைத்து தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 1.35 கிலோ அளவிலான தங்கத்தை 2 உருளை வடிவங்களில் எடுத்து வந்திருந்தார். அதன் மதிப்பு ரூ.99 லட்சம் ஆகும். அதனை யாருக்காக கடத்தி வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.