தொடர்ந்து அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் கெஜ்ரிவால்
- 6 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- தற்போது 7-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.
5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது. இதையடுத்து 7-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.
இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு செல்லவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.