சத்தீஸ்கரை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நிறைவு
- சத்தீஸ்கரில் மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில், சத்தீஸ்கரில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பின்னர், சத்தீஸ்கரில் 2ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய பிரதசேம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 45.40 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.